வீட்டின் மீது பெற்றோள் குண்டு தாக்குதல் - Yarl Thinakkural

வீட்டின் மீது பெற்றோள் குண்டு தாக்குதல்

யாழில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி இனந்தெரியாதோரால் தீயிட்டுகொழுத்தப்பட்டுள்ளதாக
யாழ் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நல்லூர் ஆலயத்திற்குபின்பக்கமாக உள்ள அரசடிச் சந்தி வைமண்வீதியில் இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மேற்படி வீதியிலுள்ளவீடொன்றில் முன்பாக ஆட்டோ ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்றை அதிகாலை 3மணியளவில் இனந்தெரியாதகும்பலொன்று சென்றுள்ளது.

இதன் போது அங்கு நின்ற ஆட்டோவைதீவைத்துவிட்டு அவர்கள்தப்பிச்சென்றுசென்றுள்ளனர். இதனால் ஆட்டோ முற்று முழுதாகஎரிந்து நாசமாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில்பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடுசெய்யப்பட்டதையடுத்தை மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post