மஹிந்தவின் உரையால் -போர்களம் ஆன பாராளுமன்றம்- - Yarl Thinakkural

மஹிந்தவின் உரையால் -போர்களம் ஆன பாராளுமன்றம்-

இன்று பாராளுமன்றம் கூடிய போது மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரையில் நேற்யை தினம் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயகரால் குரல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் அவ்வாறான ஒரு நாம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டு வருவதாக இருந்தால் அதனை வாக்களிப்பின் பெயர் குறிப்பிட்டு மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடும் போது,

பாராளுமன்றின் சபை நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஷ நடாத்திய விஷேட உரையின் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல என்று கூறி இன்றும் மீண்டுமொரு வாய்மூல நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்தே சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்தும் கைகலப்பாக மாறியது. இரத்தமேற்படும் வகையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றில் தற்போதும் பாராளுமன்றில் குழப்பநிலையேற்பட்டதால் சபாநாயகர் தனது ஆசனத்தைவிட்டு வெளியேறினார்.
Previous Post Next Post