மாட்டுடன் மோதி கனரக வாகனம் குடைசாய்ந்தது -சாவகச்சேரியில் சம்பவம்- - Yarl Thinakkural

மாட்டுடன் மோதி கனரக வாகனம் குடைசாய்ந்தது -சாவகச்சேரியில் சம்பவம்-

சாவகச்சேரி பிரதேச்சபைக்கு முன்பாக வீதியில் படு த்திருந்த மாடுகளுடன் மோதி கனரக வாகனம் ஒன் று குடைசாய்ந்துள்ளது.

குறித்த கனரக வாகனத்தின் சாரதி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் M.A.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற போது

கட்டாக்காலிகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது கட்டாக்காலிகளை பிடித்துக் கட்டுவது

அதன் உரிமையாளரிடம் தண்டம் அறவிடுதல், உரிமம் கோரப்படாத அல்லது  அறிவித்தல் கால எல்லை கடந்த கட்டாக்காலிகளை

ஏல விற்பனை செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானம் சாவகச்சேரி பிரதேச சபையால் நடைமுறைப்படுத்தப் படுவதாக இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் துணைத்தவிசாளரின் கவனத்திற்கு. Previous Post Next Post