பாராளுமன்று 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! - Yarl Thinakkural

பாராளுமன்று 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலமையில் ஆரம்பமானது.

இதன்போது, பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்தார்.

தெரிவுக்குழுவில் தமக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும் என்று ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் கோரியிருந்தனர்.

இதனை ஏற்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியினர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குழப்ப நிலை நிலவுவதால், தெரிவிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் தீர்மானத்திற்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்களிப்பில் தெரிவுக்குழ நியமனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து  பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் மற்றும் 29 திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post