சாதனை படைக்கிறது 2.0 – 10 ஆயிரம் தரையரங்குகளில் வெளியீடு! - Yarl Thinakkural

சாதனை படைக்கிறது 2.0 – 10 ஆயிரம் தரையரங்குகளில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் இங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஸய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படம் வெளியாகும் போதே சாதனையுடன் வெளியாகிறது. ஆம், இதுவரை எந்தப் படமும் வெளியாகாத அளவிற்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தளபதி படம் வெளிநாடுகளில் 100 திரையரங்குகளில் வெளியானது. அடுத்து வந்த சிவாஜி படம் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் படங்களைப் போன்று ஐமேக்ஸ் திரையரங்குகளில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். முதல் முறையாக இப்படத்தை 3டி கேமராவில் முழு படத்தையும் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post