15,000 வீட்டுத்திட்டம் ஆரம்பம் -டக்ளஸ்- - Yarl Thinakkural

15,000 வீட்டுத்திட்டம் ஆரம்பம் -டக்ளஸ்-

50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு மார்கழி மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு பங்களிப்பு செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரமதர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் அமைச்சரவைக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று வழங்கிய செவ்வியில்  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் .

இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டங்களுக்கும் மேலதிகமாக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் மேலும் ஒருதிட்டத்தை இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post