மைத்திரியின் அமைச்சரவை நிதி முடக்கம் - 122 பேருடன் நிறைவேறியது பிரேரணை! - Yarl Thinakkural

மைத்திரியின் அமைச்சரவை நிதி முடக்கம் - 122 பேருடன் நிறைவேறியது பிரேரணை!

மைத்திரி, மஹிந்த கூட்டணி அரசிலுள்ள  அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியம், மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூ டியது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட தினப்பணிகள் முடிவடைந்தபின்னர், மேற்படி பிரேரணையை முன்வைத்து, சம்பிக்க ரணவக்க உரையாற்றினார். ரஞ்சித் மத்தும பண்டாரவால் பிரேரணை வழிமொழியப்பட்டது.

குறுகிய நேர விவாதத்தின்பின்னர் 12 மணியளவில் இலத்திரனியில் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போதே 122 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக ஒரு வாக்குகூட வழங்கப்படவில்லை. ஆளுந்தரப்பு இன்றைய தினமும் சபை அமர்வை புறக்கணித்திருந்தது.

அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீ்ழ் நாடாளுமன்றமே அரசாங்க பொது நிதியை கட்டுப்படுத்துகிறது.

மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் கடந்த 15ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியத்தை பொது நிதியில் இருந்து வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.

அத்துடன் அரசாங்க பொது நிதியில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவோ, உள்நாட்டில் உலங்குவானூர்திகளில் பயணிக்கவோ முடியாது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அந்தப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

பிரேரணையின் விபரம் வருமாறு,
Previous Post Next Post