சுட்டுக்கொன்ற பல்கலை மாணவனின் குடும்பத்திற்க வீடு! - Yarl Thinakkural

சுட்டுக்கொன்ற பல்கலை மாணவனின் குடும்பத்திற்க வீடு!

யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் குடும்பத்திற்கு கிளிநொச்சி - பாரதிபுரத்தில் அமைக்கப்பட்ட வீடொன்று அமைச்சர் சுவாமிநாதனால் கையளிக்கப்பட்டுள்ளது.

13 இலட்சத்து 43,535 ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2016ஆம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம், குழப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நடராஜா கஜனும், விபத்தில் பவுண்ராஜ் சுலக்சனும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post