பெண்ணின் சங்கிலியை அறுத்த: நகை கடை உரிமையாளர்! - Yarl Thinakkural

பெண்ணின் சங்கிலியை அறுத்த: நகை கடை உரிமையாளர்!

யாழ்ப்பாணம் நெல்லியடியில் வீதியால் வைத்து  அண்மையில் பெண் ஒருவரின் சங்கிலி அறுப்புச் சம்பவத்தில் நகை கடை உரிமையாளர் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீ.சீ.ரி கமராவில் பதிவான வீடியோ காட்சியினை வைத்து குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்:-

நெல்லியடியில் வீதியில் இடம்பெற்ற குறித்த சங்கிலி அறுப்புத் தொடர்பில் நாம் தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அதன் போது எமக்கு உதவியாக ஓர் சீ.சீ.ரி கமராவின் பதிவு கிடைத்தது.

அதன் உதவியுடன் ஒருவரை நாம் கைது செய்தோம். அவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஓர் நகை கடை உரிமையாளர் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post