கேப்பாப்புலவில் 60 ஏக்கரே விடுவிக்க வேண்டும்: அமைச்சர் சுவாமிநாதன்! - Yarl Thinakkural

கேப்பாப்புலவில் 60 ஏக்கரே விடுவிக்க வேண்டும்: அமைச்சர் சுவாமிநாதன்!

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியில் இருந்து தற்போது 60 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கேப்பாப்புலவுப் பகுதியில் தற்போது 60 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் படையினரிடமிருந்து ஆறாயிரத்து ஒன்பது ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கேப்பாப்புலவுப் பகுதியில் பொது மக்களின் 470 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக 153 மில்லியன் ரூபா நிதி பாதுகாப்புத்தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மிகுதி 60 ஏக்கர் காணிகள் மாத்திரம் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியின கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன் என்றும் அமைச்சர் டிஎம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவுப் பகுதி மக்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post