இரு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து: 20ற்கு மேற்பட்டோர் காயம்! - Yarl Thinakkural

இரு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து: 20ற்கு மேற்பட்டோர் காயம்!

கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 20இற்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைஇ கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு பதுள்ளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரதத்தின் பயணம் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post