தண்டப்பணத்தில் 1,995 ரூபா அதிரடி தள்ளுபடி: போதையில் அட்டகாசம் புரிந்தோருக்கு உதவிய பொலிஸ்! - Yarl Thinakkural

தண்டப்பணத்தில் 1,995 ரூபா அதிரடி தள்ளுபடி: போதையில் அட்டகாசம் புரிந்தோருக்கு உதவிய பொலிஸ்!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.

எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடமும் தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post