2 மாதங்களில் முடித்துக் காட்டுவேன்: அரசுக்கு சவால் விடும் “விக்கி” - Yarl Thinakkural

2 மாதங்களில் முடித்துக் காட்டுவேன்: அரசுக்கு சவால் விடும் “விக்கி”

வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் அனைத்தினையும் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்து வரும் நிலையில், முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post