ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது - Yarl Thinakkural

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பமானதும் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் எழுந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறியதற்காக செலுத்தப்பட்ட அபாரத தொகை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா அதன் நிலை என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமிஇ இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. அந்த ஆலை இயங்குவதற்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் இரத்து செய்யப்பட்டு விட்டன.
தற்பொழுது சீல் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே மக்கள் இதுகுறித்து மீண்டும் போராட வேண்டாம். ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு எந்த தடையும் இல்லை. நாட்டிலேயே அதிகளவாக போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என தெரிவித்தார்.

Previous Post Next Post