மோடியை கொல்ல திட்டம் -கடிதத்தில் திடுக்கிடும் தகவல்- - Yarl Thinakkural

மோடியை கொல்ல திட்டம் -கடிதத்தில் திடுக்கிடும் தகவல்-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போன்று பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோ நக்சல்டுகள் திட்டமிட்டமை தெரிய வந்ததையடுத்து, மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோ நக்சல்டுகள் திட்டம் தீட்டியிருப்பாக ஒரு கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை பொலிஸாரை தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பலரை கைது பொலிஸார் செய்து வருகின்றனர். இதில் கைதானவர்களில் 5பேர் நக்சல்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இதில் ரோனா ஜேக்கப் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றபட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்வது தொடர்பான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை செய்யப்பட்டது போல், இந்நிகழ்வை நடத்தவும், மக்களை சந்திக்கும் பேரணி மற்றும் வீதி வழியில் நடக்கும் கான்வாயில் குண்டு வைத்து கொல்லவும், திட்டம் தீட்டியிருப்பதாக கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்துக்கள் ஆதரவு போக்கை கடைப்பிடிப்போரை முடிவுக்கு கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ள புனே பொலிஸார், பின்னர் விசாரணையை மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும் தீவிரமாக விசாரிக்கவும், பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post