ரஷ்யா செல்லும் வடகொரிய ஜனாதிபதி கிம் - Yarl Thinakkural

ரஷ்யா செல்லும் வடகொரிய ஜனாதிபதி கிம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- கிம்முக்கு இடையிலான வரலாற்று சந்திப்பு சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் கிம் ஜோங் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து கிம் ஜோங், புடினிடம் விவாதிக்கவுள்ளதாக வடகொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post