விஜய்யிடம் ரஜினி பாடம் கற்க வேண்டும் - Yarl Thinakkural

விஜய்யிடம் ரஜினி பாடம் கற்க வேண்டும்

விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13பேர் பலியான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் தூத்துக்குடிக்கு நேரில் சென்ற ரஜினிகாந்த்  அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில் நடிகர் விஜய் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில் அரசுக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இயக்குநர் அமீர் இன்று காலை அரியலூர் சென்றார். அப்போது அவருடன் நடிகர் விஜய்யின் தூத்துக்குடி பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர், பிரச்சினைக்குளான இடத்துக்கு எவ்வாறு சென்று சர்ச்சை எதுவுமின்றி திரும்புவது என்பது குறித்து, விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.


Previous Post Next Post