ட்ரம்ப்-கிம் சந்திப்பு: இடம், நேரம் அறிவிப்பு - Yarl Thinakkural

ட்ரம்ப்-கிம் சந்திப்பு: இடம், நேரம் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நல்ல முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி காலை ஒன்பது மணியளவில் சந்திக்கவுள்ளதாகவும், இதுகுறித்த தகவல்களை ட்ரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் ட்ரம்பும், கிம்மும் சிங்கப்பூரின் ஷங்ரிலா ஹோட்டலில் சந்தித்து பேசவுள்ளனர். அந்த ஹோட்டலும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.


Previous Post Next Post