முதன்முறையாக இப்தார் விருந்தளித்த ட்ரம்ப் - Yarl Thinakkural

முதன்முறையாக இப்தார் விருந்தளித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். இதில் பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க ஜனாதிபதி இப்தார் விருந்தளிப்பது வழக்கம்.

ஆனால் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலின் போதே முஸ்லிம்களுக்கு எதிராக ட்ரம்ப் பேசி வந்தார்.

இந்த பின்னணியில் கடந்த ஆண்டு அவர் இப்தார் விருந்தளிக்கவில்லை. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று ட்ரம்ப் இப்தார் விருந்தளித்தார். இதனால் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த விருந்தில் சவுதி தூதர் இளவரசர் காலித் பென் சல்மான், ஜோர்டான் தூதர் டினா கவார்,
இந்தோனேசிய தூதர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 மேலும் ஐக்கிய அரசு அமீரகம், எகிப்து, துனிசியா, கத்தார், பக்ரைன், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, குவைத், காம்பியா, எத்தியோப்பியா, ஈராக், போஸ்னியா நாட்டு தூதர்களும் விருந்தில் பங்கேற்றனர்.

Previous Post Next Post