ரஜினியுடன் மோதும் கமல் - Yarl Thinakkural

ரஜினியுடன் மோதும் கமல்

தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால் நானும் சமூக விரோதி தான் என ரஜினிக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் போராட்டம் குறித்தும், போராட்டத்தில் வன்முறையாளர்கள், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் எனக் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் கமலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறுகையில்:

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டனர் என்ற ரஜினியின் கருத்தில் என்னை பொறுத்தவரை அப்படி இல்லை. அப்படி பார்த்தால் நானும் வன்முறையாளன் தான்.

நான் காந்தியின் சீடன். போராட்டம் என்பது கத்தியும், வாளையும், துப்பாக்கியை கொண்டு நடத்துவது அல்ல. துப்பாக்கியே வந்தாலும் அதை திறந்த மார்புடன் எதிர்கொள்ளும் தன்மையை நாம் தூத்துக்குடியில் பார்த்தோம்.

அதை நான் நல்லதொரு பாதையாக பார்க்கிறேன். அதில் வன்முறை இருந்தது என்றால் அதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தை நிறுத்தக் கூடாது என தெரிவித்தார். 
Previous Post Next Post