பிக் பாஸ் நிகழ்வில் தமிழில் மட்டும் பேச வேண்டும் - Yarl Thinakkural

பிக் பாஸ் நிகழ்வில் தமிழில் மட்டும் பேச வேண்டும்

பெரும்பாலான தமிழர்களை கவர்ந்துள்ள ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்வில் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்றொரு சட்டம் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பேசினால் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு புரியாது என்பதால் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆங்கிலத்தில் பேசியதால் போட்டியாளர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்வில் போட்டியாளர்களுக்கு புதிய விதி ஒன்று அறிமுகமானது. வெளிமாநிலங்களை சேர்ந்த நடிகைகளான யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அடிக்கடி ஹிந்தியில் பேசிக்கொள்வதால் இந்த வார அணித் தலைவர் ஜனனி மூலமாக ஓர் கட்டளை விதிக்கப்பட்டது.

 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் தருணத்தில் அதைத் தெரியப்படுத்தினார் ஜனனி. அதாவது, இனிமேல் பிக் பாஸ் வீட்டில் யாரும் ஹிந்தியில் பேசக்கூடாது என்று பிக் பாஸ் நிர்வாகம் வழங்கிய கட்டளையை போட்டியாளர்களுக்கு அவர் தெரியப்படுத்தினார்.

இதையடுத்து தமிழை தவிர்த்து ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிகளிலும் பேசுவதற்கு பிக் பாஸ் வீட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழில் உரையாடும் போது அதிகமாக ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசினால் பிக் பாஸ் நிர்வாகம் எவ்வித குறுக்கீடும் செய்வதில்லை.

Previous Post Next Post