இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகள் - Yarl Thinakkural

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகள்

இராமநாதபுரம் அருகே கீழக்கரை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ரூ.7இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியதுடன் நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.
கீழக்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக இராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் தலைமையிலான பொலிஸார் கீழக்கரை காஞ்சிரங்குடி அருகே உள்ள இடிந்த கல் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்டனர். இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரை பெட்டிகள் மீட்கப்பட்டன. இதில் சுமார் ரூ.1.49இலட்சம் மாத்திரைகள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.7.45இலட்சம் ஆகும்.
இதைத் தொடர்ந்து படகின் உரிமையாளரான இருளன் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post