வன்னியில் வெடிபொருட்கள் மீட்பு - Yarl Thinakkural

வன்னியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியிலுள்ள கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் பாழடைந்த மலசல கூட குழியிலிருந்து பெருமளவு  வெடி பொருட்கள் நேற்று மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தும் மீண்டும் பயன்படுத்த முடியாதளவு உக்கிய நிலையில் காணப்பட்டன.

கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்  மலசலகூட குழியில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர். இது குறித்து உடனடியாக தருமபுரம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டன.துப்பாக்கி ரவைகள் - 12000, ஆர்பீஜி செல்கள் -04, ஆகாஸ் குண்டுகள்- 10,  கிளைமோர் குண்டுகள் - 05, டொங்கன் செல்கள் -30, 82-2 கைக்குண்டுகள் - 125, ஆகாஸ் கைக்குண்டுகள் - 10, வயர்கள்,  என்பன உள்ளிட்ட வெடிபொருட்களே மீட்கப்பட்டன.
Previous Post Next Post