ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் - Yarl Thinakkural

ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பிரதான குற்றவாளி இத்தாலியில் உள்ளார். அவர் உடல்நலக்குறைவாக உள்ளார் என பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேரறிவாளன் உட்பட 7பேரை விடுவிக்கக் கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்க பதிவில் குடியரசுத் தலைவரின் முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை குடியரசுத் தலைவர்  நிராகரித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலிடப்படாமல் தப்பித்துள்ள கொலையாளிகள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். முக்கியமான தலைமை குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார். ஆனால் அவர் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். 

Previous Post Next Post