நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டம் - Yarl Thinakkural

நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட சம்பத் நெஹ்ரா என்ற ரவுடி, பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை பொலிஸ் விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது. 
பிரபல கூலிப்படை தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய். இவரது தலைமையிலான கும்பல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயற்பட்டு வந்தது.
மான் வேட்டை வழக்கு தொடர்பாக ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு லாரன்ஸ் கடந்த ஜனவரி மாதம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சல்மான் கானை கொல்வதற்கான பொறுப்பை இக்கும்பலை சேர்ந்த சம்பத் நெஹ்ரா (28) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹரியாணா சிறப்பு அதிரடிப் படை பொலிஸார் கடந்த 6ஆம் திகதி சம்பத்தை வேறொரு குற்றத்தில் ஹைதராபாத்தில் கைது செய்தனர்.
அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் உத்தரவின் பேரில் கடந்த மே முதல் வாரத்தில் சம்பத் நெஹ்ரா மும்பை சென்று சல்மான் கான் வீட்டை நோட்டம் விட்டுள்ளார்.

அப்போது சல்மான் கான் மேல்மாடி பக்கமாக சென்று வீட்டுக்கு முன்பு கூடியிருந்த இரசிகர்களைப் பார்த்து கையசைத்துள்ளார். அப்போது மேல்மாடி எவ்வளவு தூரத்தில் உள்ளது என தெரிந்து கொள்ள முயன்றுள்ளார் சம்பத்.
மேலும் சில புகைப்படங்களும் எடுத்துள்ளார். இன்னொரு முறை நோட்டமிடவும் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் சல்மானை கொன்று விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடவும் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

Previous Post Next Post