கிம்மின் செலவை பொறுப்பேற்கும் அணு ஆயுத மறுப்பு இயக்கம் - Yarl Thinakkural

கிம்மின் செலவை பொறுப்பேற்கும் அணு ஆயுத மறுப்பு இயக்கம்

ட்ரம்ப் மற்றும் கிம் இடையே சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருக்கும் சந்திப்புக்கான செலவுகளை ஏற்க, நோபல் பரிசு பெற்ற சர்வதேச அணு ஆயுத மறுப்பு அமைப்பு (ஐ.சி.ஏ.என்) முன்வந்துள்ளது.

கிம் ஜோங் உன் ஹோட்டலில் தங்குவதற்காக ஆகும் செலவும் ஏற்க அந்த அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கிம்மும், ட்ரம்ப்பும் சிங்கப்பூரில் எதிர்வரும் 12ஆம் திகதி சந்திக்கவுள்ளனர்.

இரு நாடுகளுக்கு பொதுவான சிங்கப்பூரில் இச்சந்திப்பு நடக்கவிருப்பதால் இதற்கான செலவுகளை யார் ஏற்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இச்செலவுகளை அமெரிக்கா ஏற்க முன்வந்தாலும், பொருளாதாரத்தில் பின்னடைந்த வடகொரியா இதனை அவமானமாக எடுத்து கொள்ளும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் கிம் ஜோங் உன் ஹோட்டல் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்க ஐ.சி.ஏ.என். முனவந்துள்ளது.
Previous Post Next Post