போலி கடவுச்சீட்டில் இலங்கை தமிழர்களை வெளிநாடு அனுப்பிய கும்பல் சிக்கியது - Yarl Thinakkural

போலி கடவுச்சீட்டில் இலங்கை தமிழர்களை வெளிநாடு அனுப்பிய கும்பல் சிக்கியது


போலி கடவுச்சீட்டின் ஊடாக இலங்கை தமிழர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் கும்பலை பொலிஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போலி கடவுச்சீட்டு தயாரிப்பதாக மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த, போலி கடவுச்சீட்டு தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர், சென்னை திருவல்லிக்கேணியில் நடத்திய சோதனையில்,  வீரகுமார் (வயது-47) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள பயனற்ற கடவுச்சீட்டுக்களை விலைக்கு வாங்கி அதில் உள்ள நபரின் புகைப்படத்துக்கு பதிலாக இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி இந்திய கடவுச்சீட்டுக்களின் பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தமை தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலி கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உதவியாக இருந்த 11பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 92கடவுச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மடிக்கணனி, கடவுச்சீட்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 85ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Previous Post Next Post