தூத்துக்குடி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் ஒப்படைப்பு - Yarl Thinakkural

தூத்துக்குடி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் ஒப்படைப்பு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13பேரில் ஆறு பேரின் உடல்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களின் உடல்கள் மறுகூறாய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13பேரின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரேத பரிசோதனை செய்வது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரணையில், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர்
மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மாவட்டத்தின் நீதிபதி கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் உடற்கூறாய்வுக்கு பின்னர் ஆறு பேரின் உடல்கள் வியாழக்கிழமை மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏனையவர்களின் உடல்கள் இன்று மறு உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஏனைய ஐவரின் உடல்களும் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் ஒப்படைப்பை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.

Previous Post Next Post