சிறையில் சித்திரவதை செய்த அமெரிக்க புலனாய்வு - Yarl Thinakkural

சிறையில் சித்திரவதை செய்த அமெரிக்க புலனாய்வுஅல்-ஹைடா என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்களை துன்புறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு அனுமதி அளித்து லித்துவேனியா மற்றும் ரோமானியா நாடுகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அமெரிக்காவில் செப்ரெம்பர் 2001ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு, அபு சுபைதா மற்றும் அப்த் அல்-ரஹிம் அல்-நஷிரி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்தது. தற்போது அவர்கள் குவான்டனாமோ சிறையில் உள்ளனர். லித்துவேனியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களில் சி.ஐ.ஏ. இரகசிய சிறைகளை இயக்கி வருகிறது. ஐரோப்பிய தடைகளை மீறி சித்திரவதை செய்ததாக இரு நாடுகள் மீதும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

தீர்ப்பில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கண்கள் கட்டப்பட்டனர், தனி சிறையில் அடைக்கப்பட்டனர், hல்கள் கட்டப்பட்டன, மேலும் அதிகப்படியான சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் உட்படுத்தப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ள சி.ஐ.ஏ.வின் ஆவணங்களை நீதிபதிகள் மேற்கோள்காட்டியுள்ளனர்.

அபு சுபைதா மற்றும் அப்த் அல்-ரஹிம் அல்-நஷிரி ஆகிய இருவருக்கும் தலா ஒரு இலட்சம் யூரோக்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post