கிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தையை கொன்ற மக்கள் - Yarl Thinakkural

கிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தையை கொன்ற மக்கள்கிளிநொச்சி அம்பாள்குளம்  கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்குட்படுத்திய சிறுத்தையை பொது மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.

இன்று காலை எழு மணியளவில்  அம்பாள்குளம் விவேகானந்த  வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் புலியை பிடிக்க கூடிய வகையில் செல்லவில்லை. இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள்  திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.
பின்னர் பற்றைக்குள் சென்ற சிறுத்தையை கிராம பொதுமக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்த மக்களால் அதனை கொன்றனர்.

Previous Post Next Post