இளவரசி டயானாவை நினைவுபடுத்திய மருமகள் - Yarl Thinakkural

இளவரசி டயானாவை நினைவுபடுத்திய மருமகள்இளவரசி கேட் மில்டன் தனது குழந்தைகளுடன் ஓட்டப்பந்தயம் மேற்கொண்ட காட்சி இளவரசி டயானாவின் பழைய நினைவை ஞாபகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசி டயானா 1989ஆம் ஆண்டு தனது மகனின் பாடசாலையில் நடைபெற்ற தாய்மார்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற போது கூடியிருந்த மக்கள் எழுப்பிய சத்தம் விண்ணை அதிர வைத்தது.
இதற்கிடையே நேற்று அவரது மருமகள் தனது பிள்ளைகளுடன் நடத்திய ஓட்டப்பந்தயம் இளவரசி டயானாவை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத் தியுள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக போலோ விளையாட்டு ஒன்றில் பங்கேற்ற இளவரசர் வில்லியமுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக இளவரசி கேட் தனது இரண்டு பிள்ளைகளான குட்டி இளவரசர் ஜோர்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லட் ஆகியோருடன் விளையாட்டு மைதானத்துக்கு திடீரென சென்றார். 
அங்கு தனது பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக குழந்தைகளோடு இளவரசி கேட் ஓடி விளையாடிய காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டதுடன் டயானாவின் நினைவை மீட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post Next Post