ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மறுப்பு - Yarl Thinakkural

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மறுப்பு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7பேரையும் கருணை அடிப்படையில்  விடுவிக்குமாறு தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

இது குறித்து ராம்நாத் கோவிந்த், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு உடன்படவில்லை. குடியரசுத் தலைவர் என்ற முறையில் இதுபோன்ற விடயங்களில் நான் எனது அமைச்சர்களின் ஆலோசனைப்படி தான் நடக்க முடியுமென தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

Previous Post Next Post