ஐ.நா.வில் இருந்து விலகிய அமெரிக்கா - Yarl Thinakkural

ஐ.நா.வில் இருந்து விலகிய அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பை அரசியல் சார்புள்ள சாக்கடை என்று குற்றஞ்;சாட்டி அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

பாசாங்குத்தனம் மற்றும் தன்னாட்சி அமைப்பு போல செயற்படும் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் தொடர்பாக கேலிக்கூத்து செய்கிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு விதமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா.வால் சர்வதேச மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா இதன் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பெரும்பாலான விவகாரங்களில் இந்த அமைப்பானது மிகவும் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.

அதிலும் குறிப்பாக இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களில் மனித உரிமை ஆணையத்தின் நிலைப்பாடுகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. அத்துடன் பெரும்பாலான சமயங்களில் இந்த அமைப்பின் செயற்பாடு கேலிக்கூத்தாக அமைந்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. 

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் யுனெஸ்கோ மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்பாடு ஆகியவற்றால் இருந்து அமெரிக்கா விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post