ரணிலிடமா? டிரம்மிடமா? மக்களின் பிரச்சினைகளை செல்வது: -தவராசா கேள்வி! - Yarl Thinakkural

ரணிலிடமா? டிரம்மிடமா? மக்களின் பிரச்சினைகளை செல்வது: -தவராசா கேள்வி!

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்கும் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க எழனமாக சிரிக்கின்றார், அவருக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எண்ணமே இல்லை என்று வடமாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் வி.தவராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை பிரமரரிடம் சொல்லாமல் நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் சொல்வதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேண்கண்டவாறு தெரிவித்தார்:- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்.மாவட்டத்திற்கு வரவு செலவுத்திட்டத்தில் உள்ள 16 ஆயிரம் கோடி ரூபாவில் 80 ஆயிரம் கோடி ரூபாவே ஒருக்கப்பட்டுள்ளது.

இதந் நிதி போதாமையினாலேயே மக்களின் அடிப்படைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் உள்ளது. நிதி போதாமல் உள்ளது என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசி பயனில்லை. பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அதனை கோரி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் அரச அதிகாரிகளிடம் ஏன் அதைச் செய்யவில்லை, இததை செய்யவில்லை என்று கேள்வி கேட்பதில் எந்த பயனும் இல்லை.
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து அபிவிருத்தி தொடர்பில் கூட்டம் ஒன்றினை நடத்திய பிரதமரிடம் நிதி போதாமையுள்ளது உட்பட, மக்கள் பிரச்சினைகளை சொல்லும் போது, பிரதமர் சிந்திப்பதை விடுத்து, சிரிக்கின்றார்.

இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும், பிரதமரிடம் சொல்லாமல் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்மிடமா சென்று சொல்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Previous Post Next Post