தேர்தலில் பெனாசீர் பூட்டோவின் பிள்ளைகள் - Yarl Thinakkural

தேர்தலில் பெனாசீர் பூட்டோவின் பிள்ளைகள்

பாகிஸ்தானில் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின்  மகன், மகள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, மகள் ஆசியா பூட்டோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.  பெனாசீரின் மகள் ஆசியா ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளார். அதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. மனுக்கள் பரிசீலனை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற்று,  இறுதி வேட்பாளர் பட்டியல் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
Previous Post Next Post