அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் -ஐ.நாவிடம் அனுமதி - - Yarl Thinakkural

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் -ஐ.நாவிடம் அனுமதி -


அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயற்படுத்தி அதிகமான உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய 6வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யூரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். அதேநேரம் இதில் கையெழுத்திட்ட ஏனைய நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே யூரேனியம் செறிவூட்டலை அதிகரிக்குமாறு ஈரானின் அதிகாரம் மிக்க தலைவர் அயதொல்லா அலி கமேனி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் எங்களுடைய அணுசக்தி திட்டங்களை நாங்கள் பாதுகாப்போம் என்றும் அவர் சபதம் எடுத்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறி விட்டதால், யூரேனியம் செறிவூட்டலை அதிகரிப்பதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது.


Previous Post Next Post