நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய் - Yarl Thinakkural

நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேற்று நள்ளிரவு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 22ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது 13பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த நடிகர் விஜய் புதன்கிழமை அதிகாலை 1.30மணியளவில் இருசக்கர வாகனத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும்  தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையும் வழங்கினார். பின்பு சுமார் 2.15மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றார்.
பகல் நேரம் வந்தால் கூட்டம் கூடும். துக்க வீடுகளில் என்னை பார்க்க கூட்டம் கூடினால் அது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும். அதனாலே நள்ளிரவு வேளை சென்றதாக விஜய் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post