வடமராட்சியில் குவியும் தென்னிலங்கை மீனவர்கள்: அதிகரிக்கும் பதற்றம் நிலை! - Yarl Thinakkural

வடமராட்சியில் குவியும் தென்னிலங்கை மீனவர்கள்: அதிகரிக்கும் பதற்றம் நிலை!

வடமராட்சி கிழக்கில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து குவிந்துள்ளனர் என்று தகவல் வெளியிட்டுள்ள யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் தலைவர் தகச்செல்வம்இ அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கில் அத்துமீறி நிலை கொண்டுள்ள வெளிமாவட்ட மீனவர்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் தலைவர் தவச்செல்வம்:- வெளிமாவட்ட மீனவர்கள் அங்கு வந்து வடி அமைப்பதற்கு உள்ளுரில் உள்ளவர்கள் சிலர் பணத்தினை பெற்றுக் கொண்டு தமக்கு சொந்தமான காணியை கொடுத:துள்ளார்கள். இதனாலேயே அவர்கள் அங்கு வாடி அமைத்து தங்கி நின்று தொழில் செய்கின்றார்கள்.

கடந்த சனிக்கிழமை இவ்விடயம் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அத்துமீறல்களை பார்வையிடுவதற்கு அரசியல் வாதிகளும்இ அப்பகுதி  மீனவர்களும் அங்கு சென்றிருந்தார்கள். அங்கு சென்றவர்களுடன் வெளிமாவட்ட மீனவர்கள் முரண்பட்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக அன்று இரவோடு இரவாக 100 ற்கும் அதிகமான தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வந்து குவிந்துள்ளார்கள்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கினை நோக்கி தென்னிலங்கை மீனவர்களின் படையெடுப்பானதுஇ அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அங்கு சிக்கலான நிலை உருவாகுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு அத்துமீறியுள்ள மீனவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.
Previous Post Next Post