சுஷ்மா பயணித்த விமானம் மாயம் - Yarl Thinakkural

சுஷ்மா பயணித்த விமானம் மாயம்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானத்தின் தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏறத்தாழ 14நிமிடங்களுக்கு பின்னர் அந்த விமானம் மீண்டும் கட்டுப்பாட்டு மையத்துத்துடனான தொடர்புக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.பிரீக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுஷ்மா ஸ்வராஜ் தென்னாபிரிக்கா சென்றுள்ளார். முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சனிக்கிழமை புறப்பட்டார்.

இந்திய எல்லையை அந்த விமானம் கடந்த பின்னர் மேல் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் அதன் தொடர்புகள் இணைக்கப்பட்டன. அந்த மையத்தின் எல்லையை மாலை 4.44மணிக்கு விமானம் தாண்டி சென்றது.

அதன் பிறகு உடனடியாக மோரீஷஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் சுஷ்மா சென்ற விமானத்தின் தொடர்புகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழாமல் திடீரென தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அதற்கு அடுத்த 14நிமிடங்களுக்கு விமானம் எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவசரகால நடவடிக்கைகளை மோரீஷஸ் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டது. அதன் பயனாக விமானத்துடனான தொடர்புகள் மீண்டும் கிடைத்துள்ளன. ரேடார் தொடர்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
Previous Post Next Post