மீனவர்களை வெளியேற்ற உடனடி சட்ட நடவடிக்கை: -முதலமைச்சர்- - Yarl Thinakkural

மீனவர்களை வெளியேற்ற உடனடி சட்ட நடவடிக்கை: -முதலமைச்சர்-

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடலட்டை மற்றும் சங்கு பிடித்தலை தடுத்து நிறுத்தி அவர்களை வெளியேற்றுவதற்காகு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதன்றாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு  அனுமதி இன்றி வாடி அமைத்தல், சட்ட விதி முறைகளை மீறிய கடற்றொழில் நடவடிக்கை, சுகாதார பிரச்சினை போன்றவற்றிற்கு உரிய அதிகாரிகளை கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் வடமராட்சியில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் பேசுவதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இணைத்தலைவர்களுடைய அனுமதியுடன் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் இருந்து பெறப்பட்ட அனுமதிப்பத்திரங்ளை கொண்டுவந்து, உயர்மட்டங்களின் ஆதரவுடன் வடமராட்சியில் அத்துமீறல் கடற்றொழில் நடைபெற்று வருகின்றது.

இதனால் அங்குள்ள மீனவர்கள் பெரிதும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். இவை தடை செய்யப்பட்டு, அங்கு ஏராளமாக நிலை கொண்டுள்ள வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் சபையில் அரசியல் வாதிகளுக்கும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ஆகியோருக்கும் இடையில் பலத்த வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சரும், இணைத்தலைவர்களில் ஒருவரான க.வி.விக்னேஸ்வரன், இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் அதிகாரிகள் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அத்துமீறி நிலை கொண்டுள்ள வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அக் குழு உடனடி செய்பாடுகளில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post