காலா படத்துக்கு தடை விதிக்க முடியாது - Yarl Thinakkural

காலா படத்துக்கு தடை விதிக்க முடியாது

ரஜினி நடித்துள்ள காலா படத்துக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காலா படத்துக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கே.எஸ்.ராஜசேகரன் என்பவர் மேல்முறையீடு செய்தார்.

இவர் தாக்கல் செய்த மனுவில், கரிகாலன் என்ற தனது படத்தை காலா என்ற பெயரில் திரைப்படமாக்கியுள்ளதாகவும், சோழர் சாம்ராஜ்யத்தை மையப்படுத்தி கரிகாலன் படத்தை தான் எழுதியிருந்ததாகவும், படத்தின் கதை, தலைப்பு உள்ளிட்டவை தன்னுடையது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல் மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் திரைப்படத்தை பார்ப்பதற்று ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
எனவே திரைப்படம் வெளியாகவுள்ள ஒரு நாளைக்கு முன்பு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

மேலும் இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Previous Post Next Post