பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி - Yarl Thinakkural

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடிக்கு சென்று ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்தார்.

அதன்பிறகு சென்னைத் திரும்பிய அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சில கேள்விகளுக்கு ஆவேசத்துடன் பதிலளித்த அவர், “ஏய் வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என கேட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகை சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இதனையடுத்து இன்று ரஜினி தனது டுவிட்டரில், விமானநிலையத்தில் அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நான் பேசியதில் பத்திரிகை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post