அமெரிக்காவுக்கு கிம்மை அழைக்கவுள்ள ட்ரம்ப் - Yarl Thinakkural

அமெரிக்காவுக்கு கிம்மை அழைக்கவுள்ள ட்ரம்ப்










வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும் பட்சத்தில் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது குறித்து யோசிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி இருநாட்டு தலைவர்களுக்கிடையே நடக்கவுள்ள சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் நேற்றுமுன்தினம் பேசிய பின்னரே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் எளிதான அங்கமாக ட்ரம்ப் கூறுகையில்,  கொரிய போரை முறைப்படி முடித்து வைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளது. அதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் நடைபெறுகின்ற இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமர் அபேயின் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் நலன்களை மேலோட்டமாக மட்டுமே பார்க்க கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பூர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெறும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக ட்ரம்ப்-அபே சந்திப்பு பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post