“காலா” வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு - Yarl Thinakkural

“காலா” வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புகாலா திரைப்படம் வெளியாகும் போது கர்நாடக திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளைமறுதினம் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் "காலா' திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் "காலா' திரைப்படத்தை திரையிட அனுமதிக்குமாறும், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது காலா படம் வெளியாகும் போது கர்நாடகத் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Previous Post Next Post