முன்னாள் காதலியின் பெயரை பச்சை குத்திய ரஜினி - Yarl Thinakkural

முன்னாள் காதலியின் பெயரை பச்சை குத்திய ரஜினி

'காலா' படத்தில் தன்னுடைய முன்னாள் காதலியின் பெயரைப் பச்சை குத்தியுள்ளார் ரஜினி. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காலா'. மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்கள் படும் சிரமங்களைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

4இளைஞர்களின் தகப்பனாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் ரஜினியின் காதலியாக ஹ_மா குரேஷியும், மனைவியாக ஈஸ்வரி ராவும் நடித்துள்ளனர். ரஜினியின் காதலியாக ஷெரீனா என்ற கரக்டரில் நடித்துள்ளார் ஹ_மா குரேஷி. வழக்கமான காதலன்களை போலவே தன் காதலியின் பெயரை ரஜினியும் பச்சை குத்தியுள்ளார். ஷெரீனா என்ற பெயரைப் பேச்சுவழக்கில் 'சரீனா' என வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

Previous Post Next Post