பேரறிவாளனை கொன்று விடுங்கள் -தாயார் அற்புதம்மாள் கண்ணீர் கோரிக்கை- - Yarl Thinakkural

பேரறிவாளனை கொன்று விடுங்கள் -தாயார் அற்புதம்மாள் கண்ணீர் கோரிக்கை-

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய முடியா விட்டால், அவரை கருணைக் கொலை செய்து விடுமாறு தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததாக செய்திகள் வெளியானது.

குடியரசு தலைவரின் நிராகரிப்பை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் கருத்து கேட்டது. இதற்கு பதிலளிக்கையில், பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்யுங்கள். தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே கருணை கொலை செய்து விடலாம். 

இந்த விடயத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் இப்போது வருவது ஏன்? என்று புரியவில்லை. எங்களை குடும்பத்துடன் கருணை கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கலங்கிய கண்களோடு தெரிவித்துள்ளார். 

Previous Post Next Post