சிங்கள மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழில் போராட்டம் - Yarl Thinakkural

சிங்கள மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழில் போராட்டம்வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது.

இன்று காலை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்பாக கூடிய பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் பிரதான வீதி வழியாக யாழ்.மாவட்ட செயலகத்தை அடைந்து மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்ததுடன் தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலருக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர்.


Previous Post Next Post