மாரியம்மன் கோயிலில் மோடி - Yarl Thinakkural

மாரியம்மன் கோயிலில் மோடி


சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு சென்ற மோடி அங்கு நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்தனர். மாநாட்டில் இரு தலைவர்களும் உரையாற்றினர்.
பின்னர் சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு மோடி நேற்று சென்றார். அவரை கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மோடிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சூலியா மசூதிக்கும் மோடி சென்று பார்வையிட்டார். அவருடன் சிங்கப்பூர் கலசார அமைச்சர் கிரேஸ் யென் உடன் சென்றார்.

Previous Post Next Post