ஒரேநாளில் அதிக வசூலை எட்டிய காலா - Yarl Thinakkural

ஒரேநாளில் அதிக வசூலை எட்டிய காலா

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஒரே நாளில் சென்னையில் மட்டும்        ரூ.1.76கோடியை வசூலித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் காலா திரைப்படம் நேற்று வெளியானது. சென்னையில் கடந்த வருடம் அஜித் நடித்த விவேகம் ரூ. 1.21கோடியும், விஜய் நடித்த மெர்சல் படம் ரூ.1.52கோடியும் ஒரு நாளில் அதிக வசூலை பெற்றது.

இந்நிலையில் தற்போது காலா படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.76கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எப்படமும் இந்த வசூலை எட்டவில்லை. இப்புள்ளிவிவரம் காலா படத்துக்கும் ரஜினி-பா.இரஞ்சித் ஆகிய இருவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Previous Post Next Post