ஐரோப்ப எல்லையை தாண்டிய பசுவுக்கு மரண தண்டனை - Yarl Thinakkural

ஐரோப்ப எல்லையை தாண்டிய பசுவுக்கு மரண தண்டனை


ஐரோப்பாவின் தென் கிழக்கே உள்ள பல்கேரியாவை சேர்ந்த பசுவொன்று ஐரோப்பிய யூனியன் எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லை பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தை சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையிலிருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு மேய்ச்சலுக்கு சென்ற போது பல்கேரிய எல்லை தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு.

ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும். இதனால் ஐரோப்பிய அதிகாரிகள் பசுவுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர். எல்லை தாண்டிய பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post